விஜய்சேதுபதிக்கு ஜோடி த்ரிஷா

thi

நலன் குமாரசாமி இயக்கிய சூதுகவ்வும் படம் வெற்றியடைந்ததை தொடர்ந்து அடுத்தது இயக்கவுள்ள படத்தின் கதையை கேட்ட த்ரிஷா உடனே சம்மதம் தெரிவித்ததுடன் இப்படத்தின் கதாநாயகன் யார்? சம்பளம் எவ்வளவு என்று எதையும் கேட்காமல், படத்தின் கதையில் தன்னுடைய கேரக்டர் பிடித்துவிட்டதால் ஒப்புக் கொண்டாராம். பின்பு நலன் குமாரசாமி விஜய்சேதுபதி தான் கதாநாயகன் என்று சொன்னதும் பரவாயில்லை அவரது நடிப்பு எனக்கு மிகவும் பிடிக்கும் அவருடன் இணைந்து நடிக்க தயார் என தெரிவித்தார். விஜய்சேதுபதிக்கு தனக்கு ஜோடியாக த்ரிஷா என்றதும் பம்பர் குலுக்கல் அடித்தது போல் இருக்கிறது என்றார்.