அஞ்சான்

'சிங்கம் 2" படத்தினைத் தொடர்ந்து தற்போது 'அஞ்சான்" படத்தில் நடித்து வருகிறார் சூர்யா.

இரட்டை வேடத்தில் சூர்யா நடிக்கும் இப்படத்தினை இயக்கி வருகிறார் இயக்குநர் லிங்குசாமி.  யுவன் இசையமைக்கும் இப்படத்தினை திருப்பதி பிரதர்ஸ் நிறுவனம் தயாரிக்க, யு.டிவி நிறுவனம் வெளியிடுகிறது. மும்பையில் உள்ள அந்தேரி பகுதியில் நடைபெறுவது போல இப்படத்தின் கதையினை வடிவமைத்து இருக்கிறார் லிங்குசாமி.

சமீபத்தில் இப்படத்திற்காக யுவன் ஷங்கர் ராஜாவின் அதிரடி இசையில் சூர்யாவுக்கான ஓபனிங் பாடலை எழுதி முடித்திருக்கிறார் மதன் கார்க்கி. ரசிகர்களிடத்தில் பெரும் வரவேற்பைப் பெற இருக்கும் ‘அஞ்சான்’ சூர்யாவுக்கான ஓபனிங் பாடலின் சிலவரிகள் இங்கே உங்களுக்காக..

எந்தத் தோட்டாவை எடுத்தாலும் ஒரு பேருதான்!

மும்பை கேட்டுக்கும் ரோட்டுக்கும் ஒரு பேருதான்!

இங்க அப்பப்ப அங்கங்க தீப்பத்திக்குமே

ஓர் ஆபத்தில் அவன் பேரு காப்பாத்துமே

அந்தேரி புலி பேரச் சொன்னா அடி நெஞ்சிலே

பேங் பேங் பேங்!!!

ராஜு பாய் உன்ன கண்ணால பாத்தாலே

பேங் பேங் பேங்!!!

ராஜு பாய் வந்து முன்னால நின்னா

பேங் பேங் பேங்!!!

இந்தப் பாடல் வரிகளை கவனிக்கும்போது ‘அஞ்சான்’ படத்தில் இரட்டை வேடங்களில் நடிக்கும் சூர்யாவில் ஒருவர் மும்பை ‘டான்’ என்பதும், அவரின் பெயர் ‘ராஜு பாய்’ என்பதும் தெரிகிறது. ‘நாயகன்’, ‘பாட்ஷா’ வரிசையில் ‘அஞ்சான்’ படமும் பெரிய வெற்றிப்படமாக அமையும் என்பது சூர்யா ரசிகர்களின் அசைக்கமுடியாத நம்பிக்கை.