இருவரும் நடிக்க சம்மதம் விக்ரம், சூர்யா!

பாலாவின் படைப்புலகில் இருந்து நடிகர்களாக செதுக்கப்பட்டவர்கள் விக்ரமும், சூர்யாவும். இவர்கள் பாலா எடுத்த சேது, நந்தா படத்தில் தனித்தனியே நடித்தாலும் பிதாமகன் படத்தில் சேர்ந்தும் நடித்தனர்.பிறகு பாலாவின் மீது கொண்ட அன்பால் அவன்-இவன் படத்தில் சூர்யா நட்புக்காக சில காட்சிகள் நடித்தார். தற்போது பாலா இயக்கும் படம் ’தாரை தப்பட்டை’ இப்படத்தில் சசிக்குமார் கதாநாயகனாக நடிக்கிறார்.இதில் கரகாட்டம் தான் படத்தின் மையக்கரு என்பது அனைவருக்கும் தெரியும். படத்தின் ஒரு காட்சியில் விக்ரமும், சூர்யாவும் கரகாட்டத்தை பார்ப்பது போல் ஒரு காட்சி வருகிறதாம், பாலாவிற்காக இருவரும் நடிக்க சம்மதம் தெரிவித்திருக்கிறார்களாம். -