கார்த்தி நடிக்கும் கொம்பன்

தனது முதல் படமான பரூத்திவீரன் தொடங்கி, தொடர்ந்து ஹிட் படங்களைக் கொடுத்தவர் கார்த்தி.

ஆனால் சமீபகாலமாக அவருடைய படங்கள் தொடர் தோல்விகளை சந்தித்து வருகின்றன. இதனால நொந்து போன கார்த்தி இப்போதெல்லாம் கதை தேர்ந்தெடுப்பதில் அதிக பெறுமையை கடைபிடித்து வருகிறார். அப்படி நிதானமாக அவர் கேட்டு ஒப்புக்கொண்ட படம்தான் மெட்ராஸ். அட்டகத்தி புகழ் ரஞ்சித் இயக்கும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில்தான் முடிவடைந்தது. படத்தின் இறுதிகட்ட வேலைகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில், கார்த்தி தனது அடுத்தப்படமான 'கொம்பன்' படப்பிடிப்பில் இறங்கிவிட்டார். சசிகுமார் நடித்த 'குட்டிப்புலி' படத்தை இயக்கிய முத்தையா இப்படத்தை இயக்குகிறார். கார்த்தியின் குடும்ப நிறுவனமான ஸ்டுடியோ கிரீன் நிறுவனாம் சார்பில் ஞானவேல் ராஜா தயாரிக்கிறார். இதில் கார்த்திக்கு ஜோடியாக லட்சுமி மேனன் நடிக்கிறார். ராஜ்கிரண் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.

வில்லனாக பிரபல சண்டை இயக்குனர் சூப்பர் சுப்புராயன் நடிக்கிறார். வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்யும் இப்படத்தின் படப்பிடிப்பு நெற்று ராமநாதபுரத்தில் பூஜையுடன் தொடங்கியது. குட்டிப்புலி போன்றே இதுவும் வில்லேஜ் காமெடி லவ் சப்ஜெக்ட் படமாம். காரைக்குடி, சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய பகுதிகளில் 70 நாட்கள் ஒரே ஷெட்யூலில் படப்பிடிப்பை நடத்தி முடிக்க திட்டமிட்டிருக்கிறார்கள்