நடித்து வரும் படம் 'லிங்கா'?

கோச்சடையான் வெற்றிக்குப் பிறகு ரஜினி நடித்து வரும் படம் ‘லிங்கா’.

இப்படத்தில் ரஜினிக்கு ஜோடியாக சோனாக்ஷி சின்ஹா, அனுஷ்கா ஆகியோ நடிக்கின்றனர். இவர்களுடன் லண்டன் நடிகை லாரென், கருணாகரன், சந்தானம் என ஒரு பெரிய நட்சத்திர பட்டாளமே உள்ளது. கே.எஸ்.ரவிகுமார் இயக்கி வரும் இப்படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத் ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் முழுவீச்சில் நடந்து வருகிறது.

பொன்.குமரன் கதை, திரைக்கதை எழுதியுள்ளார். ரத்னவேலு ஒளிப்பதிவு செய்ய ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்து வருகிறார். ராக்லைன் வெங்கடேஷ் தயாரித்து வருகிறார். இந்நிலையில் லிங்கா' படம் தீபாவளிக்கு வெளியாகலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன. தற்போது வரை 40% காட்சிகளை படமாக்கியுள்ளாராம் கே.எஸ்.ரவிகுமார்.

இதே வேகத்தில் படப்பிடிப்பு போனால் படம் கண்டிப்பாக தீபாவளிக்கு வெளியாகும் என்பதில் ஆச்சர்யமில்லை. அதனால் தற்போதே படத்தின் உரிமைகளை வாங்க பலத்த போட்டி நிலவி வருகிறது. லிங்கா படத்தின் தெலுங்கு உரிமைக்கு பலத்த போட்டி நிலவி வருகிறது. தெலுங்கு படவுலகை சேர்ந்த தயாரிப்பாளர் ஒருவர் ‘லிங்கா’ படத்தின் தெலுங்கு உரிமைக்கு 35-லிருந்து 40 கோடி வரை தர தயாராக உள்ளார். ரஜினி நடித்த 'எந்திரன்' படத்தின் தெலுங்கு பதிப்பின் உரிமை 27 கோடிக்கு விலை போனது குறிப்பிடத்தக்கது.