வில்லன் வேடமேற்கும் ஆர்யா!

தமிழ் சினிமாவில் தற்போது முன்னணி நடிகர்கள் பலர் வில்லனாகி கொண்டிருக்கின்றனர்.

மங்காத்தாவில் அஜித் வில்லனாக நடித்து பலரின் கவனத்தையும் ஈர்த்தார். அவரைத் தொடர்ந்து சூர்யா அஞ்சான் படத்திலும், விஜய் கத்தி படத்திலும் வில்லன் வேடம் ஏற்றிருப்பதாக கூறப்படுகிறது. இப்போது இந்த வரிசையில் ஆர்யாவும் இணையப் போவதாக தகவல் வெளியாகி உள்ளது.

ஜெயம் ரவி தனது அண்ணன் ஜெயம் ராஜா இயக்கும் தனி ஒருவன் படத்தில் நடித்து வருகிறார். இதில் ஜெயம் ரவிக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்தப் படத்தில்தான் ஆர்யா வில்லன் வேடத்தில் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது.

காரணம் வில்லனுக்கு படத்தில் பவுர்புல்லான வேடமாம். அதனால முன்னணி நடிகர்கள் நடித்தால் நன்றாக இருக்கும் என்று கருதுகின்றனர். முதலில் இந்த வேடத்திற்கு சிம்பு, விஷால், ஜீவா போன்ற நடிகர்களிடம் பேச்சு வார்த்தை நடந்துள்ளது. ஆனால் இதில் ஆர்யாவை தவிர வேறு யாரும் பாசிட்டிவான பதிலை சொல்லவில்லையாம். இருந்தாலும் வில்லனாக நடித்தால் மக்கள் ஏற்றுக்கொள்வார்களா என்கிற தயக்கமும் ஆர்யாவுக்கு சற்று இருக்கிறாராம்.