பார்த்திபன் மகள் கீர்த்தனா!

kir[1]

நடிகர் பார்த்திபன் மகள் கீர்த்தனா, விரைவில் இயக்குனர் அவதாரம் எடுக்க உள்ளார்.

மணிரத்னம் இயக்கிய கன்னத்தில் முத்தமிட்டால் படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி பலரது இதயத்தை வசீகரித்தவர் கீர்த்தனா.

விரைவில் கதாநாயகியாக வலம் வருவார் என சினிமா வட்டாரம் ஆவலோடு எதிர்பார்த்துக் கொண்டிருக்க அவரோ இயக்குனராவதை லட்சியமாக கொண்டு செயல்பட்டு வருகிறார்.

அமாங்க, கீர்த்தனா ஆரண்ய காண்டம் படத்தை இயக்கிய தியாகராஜா குமாரராஜாவிடம் உதவி இயக்குனராகப் பணியாற்றி வருகிறாராம். ஆரண்ய காண்டம் படத்தைப் பார்த்துவிட்டு மிகவும் இம்ப்ரஸ் ஆன கீர்த்தனா, தன் அப்பாவிடம் சொல்லி தியாகராஜா குமாரராஜாவிடம் உதவி இயக்குனராக சேர்ந்துவிட்டாராம்.

நடிப்பில் அதிக விருப்பம் இல்லாத கீர்த்தனா, விரைவில் நல்ல கதையொன்றுடன் இயக்குனராக அறிமுகமாவதை நீங்கள் எதிர்பார்க்கலாம்.