அஜித் நடிக்கும் 55வது படத்தின் கதை

கெளதம்மேனன் இயக்கத்தில் அஜித் நடித்து வரும் அவரது 55வது படத்தின் கதை இப்போது பேஸ்புக் மூலமாக கசிந்துள்ளது.

இந்த வேலையை செய்தவர் கௌதம் மேனனின் உதவியாளராம். கதைப்படி சென்னை ஈ.சி.ஆர். ரோட்டில் நடிகை த்ரிஷா காரில் சென்று கொண்டிருக்கும் போது மர்ம ஆசாமிகள் அவரை பட்ட பகலில் படுகொலை செய்து விட்டு தப்பி ஓடிவிடுவார்களாம். கொலையாளி யார்? அவர்கள் ஏன்..? த்ரிஷாவை கொலை செய்தார்கள் என்பதை போலீஸ் அதிகாரியாக நடித்துள்ள அஜித் புலனாய்வு செய்து கண்டு பிடிப்பாராம்.

இந்த கொலையை கண்டுபிடிக்க அஜித்துக்கு உதவியாக இருப்பாராம் அனுஷ்கா. மீடியாக்களுக்கு தெரியாமல் ரகசியமாக வைத்திருந்த கதையை தனது ஃபேஸ்புக்கில் வெளியிட்ட உதவி இயக்குனரை படத்தில் இருந்து கெளதம் மேனன் அதிரடியாக நீக்கிவிட்டதாக கூறப்படுகிறது.

சில நாட்கள் முன்பு தான் விஜய்யின் கத்தி படத்தின் கதை வெளியே வந்தது. அது போலவே தற்பொழுது கெளதம் மேனன் இயக்கத்தில் அஜித் நடித்து வரும் தலயின் 55ஆவது படத்தின் கதையும் வெளிவந்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.