யாழ்.குடாநாட்டில் புதைக்கப்பட்டுள்ள கண்ணிவெடிகள் அகற்றும் பணி சிறிது காலத்தில் முடிவடைது விடுமாம்

யாழ்.குடாநாட்டில் புதைக்கப்பட்டுள்ள கண்ணிவெடிகள் மற்றும் மிதிவெடிகளை அகற்றும் பணிகள் இறுதிக்கட்டத்தை அடைந்துள்ளதாகக் கண்ணிவெடி அகற்றும் குழுக்கள் தெரிவித்துள்ளன.
மோதல்களின் போது யாழ்.குடாநாட்டில் புதைக்கப்பட்டிருந்த கண்ணிவெடிகளை கடந்த காலத்தில் சர்வதேச தொண்டு நிறுவனங்களின் உதவியுடன் அகற்றும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதாகவும் இந்த கண்ணிவெடிகளை அகற்றும் நடவடிக்கையில் இரண்டு நிறுவனங்கள் ஈடுபட்டு இதுவரை 46ஆயிரம் மிதிவெடிகள் மற்றும் கண்ணிவெடிகளை அகற்றியுள்ளன. இன்னும் சிறிய பரப்பளவில் மட்டும் தமது பணிகளை மேற்கொள்ளவேண்டியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.