இளைஞர் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார்.

மன்னார் மூர் வீதி காட்டுப் பள்ளிவாசல் பிரதான வீதியில் நேற்று மாலை 6.50 மணியளவில் இனந் தெரியாத ஆயுததாரிகளால் இளைஞர் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.
சுட்டுக் கொல்லப்பட்ட இளைஞர் மன்னார் காட்டுப்பள்ளிவாசல் பகுதியை வதிவிடமாகக் கொண்ட செல்வராசா கிங்சிலி (வயது 29) என அடையாளம் காணப்பட்டுள்ளார். மேற்படி இளைஞர் தனது வேலையை முடித்துக் கொண்டு மன்னார் மூர்வீதி பிரதான வீதியூடாகத் தனது வீட்டுக்கு சென்று கொண்டிருந்தபோது இவர் மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
அருகிலுள்ள இராணுவத்தினர் பொலிசாருக்கு தகவல் தெரிவித்ததை அடுத்து காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் இவர் உயிரிழந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது