பெண் ஒருவர் சுட்டுக்கொலை

மட்டக்களப்பு டி1 காக்காச்சிவெட்டை வெல்லாவெளி பகுதியைச் சேர்ந்த இரு குழந்தைகளின் தாயான 30 வயதுடைய தம்பிப்பிள்ளை பேரின்பநாயகி என்னும் விதவைத் தாய் இனந்தெரியாத ஆயுததாரிகளினால் நேற்றிரவு சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். கடந்த ஒன்றரை வருடங்களுக்கு முன்னர் இவரது கணவரும் ஆயுததாரிகளினால் சுட்டுக் கொல்லப்பட்டிருந்தார் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. இந்தக் கொலை தொடர்பான விசாரணைகளை மட்டக்களப்ப பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்