உலங்குவானூர்தி மீது சாம் ஏவுகணை தாக்குதல்

புதுக்குடியிருப்புப் பிரதேசத்தில் இருந்து தமிழீழவிடுதலைப்புலிகள் இன்று இராணுவ உலங்குவானூர்தி மீது சாம் ஏவுகணை தாக்குதல் நடத்தியதாக இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார தெரிவித்துள்ளார்.

இன்று முற்பகல் 11 மணியளவில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாகவும் இதனால் உலங்குவானூர்திக்கு எந்த சேதமும் ஏற்படவில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
விடுதலைப்புலிகள் புதுமத்தாளன் பகுதியில் பதுங்குகுழிகளை அமைத்துள்ளதுடன் அங்கிருந்து படையினர் மீது தாக்குதல் நடத்தி வருவதாகவும் உதய நாணயக்கார குறிப்பிட்டுளளார்.