யாழ்ப்பாணம்- பருத்தித்துறை வீதியை அகலப்படுத்தும் பணி

யாழ்ப்பாணம்- பருத்தித்துறை வீதியை அகலப்படுத்தும் பணிகளை வீதி அபிவிருத்தி அதிகார சபை ஆரம்பித்துள்ளது.

இந்த வீதி 50 அடி அகலத்திற்கு விரிவுபடுத்தப்படவுள்ளதுடன் யாழ்ப்பாணத்திற்கு பருத்தித்துறை துறைமுகத்திலிருந்து பொருட்களை வாகனங்களின் மூலம் கொண்டுவரப்படும் சமயங்களில் வீதிப் போக்குவரத்துக்கு இடநெருக்கடி ஏற்படுவதால் ஆசிய அபிவிருத்தி வங்கியின் உதவியுடன் அந்த வீதியை அகலமாக்குவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இதேபோன்று காங்கேசன்துறை யாழ்ப்பாண வீதியையும் அகலமாக்குவதற்கான நடவடிக்கைகள் வீதி அபிவிருத்தி அதிகார சபையினால் ஆரம்பிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது