யாழ்ப்பாணத்தில் பாதுகாப்பு தளர்த்தப்பட்டுள்ளது – பாதுகாப்பு தரப்பு

யாழ்ப்பாண குடாநாட்டிற்கு வழங்கப்பட்டிருந்த தீவிர பாதுகாப்பு ஏற்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளதாக

இராணுத்தினர் தகவல் வெளியிட்டுள்ளனர். யாழ்ப்பாண குடாநாட்டின் கனிசமான பகுதி இராணுவத்தினரின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதனால் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. அநேகமான சோதனைச் சாவடிகள், இராணுவ வீதித் தடைகள் அகற்றப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. சில காலமாக மூடப்பட்டிருந்த பல பாதைகளும் தற்போது மக்கள் போக்குவரத்திற்காக திறந்து விடப்பட்டுள்ளதாக இராணுவத் தரப்பு செய்திகள் தெரிவிக்கின்றன