புதிய பஸ் சேவை

தெல்லிப்பழையில் உள்ள சோதனைச் சாவடியிலிருந்து தெல்லிப்பழை மகா ஜனாக்கல்லூரிக்கு மாணவர்களை ஏற்றிச் செல்வதற்கும், நோயாளர்களை தெல் லிப்பழை ஆதார வைத்தியசாலைக்கு ஏற்றிச்செல்வதற்குமென புதிய பஸ் சேவை விரைவில் ஆரம்பிக்கப்படவுள்ளது.
நேற்று ஞாயிற்றுக்கிழமை பலாலி படைத்தலைமையகத்தில் நடைபெற்ற மீள்குடியேற்ற உயர்மட்டக்குழுக் கூட்டத் தில் இதற்கான முடிவு எடுக்கப்பட்டது.
உயர்மட்டக்குழுவின் தலைவர் மேல் நீதிமன்ற நீதிபதி ஆர்.ரி.விக்னராஜா தலைமையில் அரச அதிபர், யாழ்.பொலிஸ் அத்தியட்சகர், யாழ்.படைத்தளபதி, யாழ்.கடற் தளபதி ஆகியோர் இக்கூட்டத்தில் கலந்து கொண்டனர்.
சோதனைச் சாவடிக்குட்பட்ட பிரதேசத்தில் வீதி திருத்தும் பணி நடைபெற்று வருகிறது. திருத்தப்பணி முடிந்ததும் இப்பாதையூடான போக்குவரத்துக்கென பஸ்வண்டி கொழும்பிலிருந்து கொண்டு வரப்பட்டதும் போக்குவரத்துச் சேவையில் ஈடுபடுத்தப்படும் என்று தெரிவிக் கப்பட்டது.
அண்மைக்காலங்களாக சோதனைச்சாவடியிலிருந்து மாணவர்களும், நோயா ளர்களும் முறையே பாடசாலைக்கும் வைத்தியசாலைக்கும் நடந்தே சென்று வருகின்றனர்.
இதேவேளை தெல்லிப்பழைப் பிரதே சத்தில் கண்ணிவெடி அகற்றும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இப் பணி நிறைவடைந்ததும் இடம்பெயர்ந்த வர்கள் மீள் குடியேற்றத்திற்கு அனுமதிக்கப்படுவர் என மேலும் தெரிவிக்கப்பட்டது.