துப்பாக்கி சூடுகாவற்துறையினர் சிலர் உயிரிழந்தனர்

புத்தல‐ கதிர்காமம் வீதியில் கோனகன்ஹார பிரதேசத்தில் உள்ள காவற்துறை காவரண் மீது இன்று அதிகாலை விடுதலைப் புலிகள் எனச் சந்தேகிக்கப்படும் ஒரு குழுவினால் மேற்கொண்ட துப்பாக்கி பிரயோகத்தில் இரண்டு சிவில் பாதுகாப்பு படைச் சிப்பாய்கள் உயிரிழந்துள்ளதாக காவற்துறைப் பேச்சாளர் ரஞ்சித் குணசேகர தெரிவித்துள்ளார். இந்த சம்பவம் இன்று அதிகாலை 7.30 அளவில் இடம்பெற்றுள்ளது.

புத்தல‐ கதிர்காமம் வீதியின் கலகே காவலரண் மீது இதற்கு முன்னர் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி சூட்டில் காவற்துறையினர் சிலர் உயிரிழந்தனர். இதன் பின்னர் பாதுகாப்பு தரப்பினர் யால வனப்பகுதியில் தேடுதல்களை மேற்கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது