இளைஞரொருவரின் சடலம்

யாழ்ப்பாணம் புன்னாலைக்கட்டுவன் பகுதியில் நேற்று வெள்ளிக்கிழமை காலை இளைஞரொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. கழுத்து வெட்டப்பட்ட நிலையில் இச்சடலம் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இவ்வாறு வெட்டிக் கொல்லப்பட்டவர் புன்னாலைக்கட்டுவன் தெற்கைச் சேர்ந்த எம் வாமதேவன் வயது 40 என அடையாளம் காணப்பட்டுள்ளது. மதுபான விற்பனை நிலையமொன்றுக்கு ரூபா 15 ஆயிரம் ரூபாவை கொடுப்பதற்கு சென்று கொண்டிருந்தபோதே புன்னாலைகட்டுவன் பலாலி வீதியில் வைத்து இவர் வெட்டிக் கொல்லப்பட்டுள்ளதாகவும் இவர் வைத்திருந்த பணமும் கொள்ளையிடப்பட்டுள்ளதாகவும் தனிப்பட்ட விரோதம் காரணமாகவே இந்த கொலை இடம்பெற்றுள்ளதாகவும் பிரதேசத் தகவல்கள் தெரிவிக்கின்றன.