நாளாந்தம் ஐவர் உயிரிழக்கின்ற னர்

புதுமாத்தளன்

வைத்தியசாலையில் காயமடைந்த நிலையில் சேர்க்கப்படும் மக்களில்  நாளாந்தம் ஐவர் உயிரிழக்கின்ற னர் என அந்த வைத்தியசாலையின் வைத் திய அதிகாரி டாக்டர் பீ.சத்தியமூர்த்தி தெரிவித்தார்.
கடந்த சனிக்கிழமை பீரங்கித் தாக்குத லுக்கு இலக்காகி காயமடைந்த நிலையில் 12 பேர் வைத்தியசாலையில் சேர்க்கப்பட் டனர் என்றும் அவர்களுக்கு சிகிச்சைய ளிக்க மருந்துகள் இல்லை என்றும் அவர் கூறினார்.
இதேவேளை படுகாயமடைந்த நிலையில் புதுமாத்தளன் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த 400 பேர் நேற்றுமுன்தினம் மாலை "கிரீன் ஓஷன்" கப்பல் மூலமாக முல்லைத்தீவிலிருந்து திருகோணமலைக்கு அனுப்பி வைக்கப் பட்டனர் என்றும் அவர் தெரிவித்தார்.
கடந்த ஜனவரி மாதம் முதல் இதுவரை பீரங்கித் தாக்குதல் மற்றும் விமானத் தாக்குதலுக்கு இலக்காகிக் காயமடைந்த 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் சேர்க்கப்பட்டுள்ளனர் என டாக்டர் சத்தியமூர்த்தி மேலும் தெரிவித்தார்