பிரான்ஸ் அரசாங்கம் கோரிக்கை

இலங்கையில் உடனடியாக சமாதானப் பேச்சுவார்த்தை ஆரம்பிக்கப்பட வேண்டுமென பிரான்ஸ் அரசாங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
பல தசாப்தங்களாக நீடித்து வரும் போராட்டத்திற்கு அரசியல் தீர்வுத் திட்டத்தின் மூலமே நிரந்தரத்தீர்வினை எட்ட முடியும் என பிரான்ஸ், இலங்கை அரசாங்கம் மற்றும் விடுதலைப் புலிகளிடம் தெரிவித்துள்ளது.
இலங்கை அரசாங்கத்தினால் அறிவிக்கப்பட்டுள்ள மன்னிப்பு அறிவித்தல் உரிய வகையில் பயன்படுத்த வேண்டுமென பிரான்ஸ் வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.
விடுதலைப் புலிகளும் அரசாங்கமும் இணைந்து நாட்டின் அனைத்து குடிமக்களது உரிமைகளும் பேணப்படக் கூடிய வகையில் தீர்வுத் திட்டமொன்றை முன்வைக்க வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
யுத்தம் காரணமாக சிவிலியன்கள் பெருமளவில் பாதிக்கப்படுவதனை ஏற்றுக்கொள்ள முடியாது எனவும், பிரான்ஸ் அரசாங்கம் இது குறித்து உன்னிப்பாக அவதானித்து வருவதகாவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.