ரத்துச் செய்யப்பட்டது

காங்கேசன்துறைக்கும் திருகோண மலைக்கும் இடையிலான பயணிகள் கப்பல் சேவை நேற்றுத் திடீரெனத் ரத்துச் செய்யப்பட்டது. அதன் காரணமாக கப்பல் பயணத்துக்கு சென்ற மக்கள் ஏமாற்றத்துடன் திரும்பினார்கள்.
இந்தச் சேவை ரத்துச்செய்யப்பட்டமை  தொடர்பாக யாழ். சிவில் நிர்வாக அதிகாரியுடன் தொடர்பு கொண்டு கேட்ட போது கப்பல் "என்ஜினில்" ஏற்பட்ட பழுது காரணமாக சேவை நேற்று இடம்பெறவில்லை. சேவை மீண்டும் எப்போது ஆரம்பிக்கப்படும் என்ற தகவல் நேற்றிரவு வரை கிடைக்கவில்லை.
சேவை ஆரம்பிப்பது தொடர்பாக கப்பல் நிறுவனத்தின் தகவல் கிடைத்ததும் பொது மக்களுக்கு அறிவிக்கப்படும்  என்று தெரிவித்தார்.
கப்பல் சேவையை, இன்றோ நாளையோ ஆரம்பிக்கும் வாய்ப்பு மிகக் குறைவு என்றும் அவர் கூறினார்.