மூவர்மட்டக்களப்பு மாவட்டத்தில் சுட்டுக்கொலை

மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த 24 மணி நேரத்திற்குள் ஆயுததாரிகளால் மேற்கொள்ளப்பட்ட இருவேறு துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்களில் மூவர் கொல்லப்பட்டுள்ளனர்.

வாழைச்சேனைப் பிரதேசத்திலுள்ள அக்கறானையில் நேற்று மாலை கால்நடைப் பண்ணைத் தொழிலாளியான 28 வயதுடைய இளையதம்பி இராதாகிருஷ்ணன் என்பவர் ஆயுததாரிகளால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். இவர் துறைநீலாவணைச் சேர்ந்தவர் எனவும் தொழில் காரணமாக அக்கறானையில் தங்கியிருந்தவேளை ஆயுததாரிகளால் கடத்திச் செல்லப்பட்டுச் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.

இதேவேளை, நேற்று மாலை வவுணதீவுப் பிரதேசத்திலுள்ள உன்னிச்சையில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் இருவர் கொல்லப்பட்டுள்ளார்கள். கொல்லப்பட்ட இருவரும் புலிகள் இயக்க உறுப்பினர்கள் என பாதுகாப்புத் தரப்பினர் மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கையின் போது அடையாளம் காணப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு செய்திகள் தெரிவிக்கின்றன.