ரீ.எம்.வீ.பீ உறுப்பினர் சுட்டுக்கொலை

sri-lanka-cp-rtx98zc[1] மட்டக்களப்பு செங்கல்லடிப் பிரதேசத்தில் நேற்று இரவு 8.45 மணியளவில் தமிழ் மக்கள் விடுதலை புலி உறுப்பினர் ஒருவர் எல்லை வீதியில இனந்தெரியாத ஆயுததாரிகளால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார்.

இவர் செங்கலடி நாகதம்பிரான் கோவிலடியைச் சேர்ந்த் 31 வயதுடைய புத்திரசிகாமணி மோகனதாஸ் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

செங்கல்லடியிலிருக்கும் ரீ.எம்.வீ.பீ காரியாலயத்தில் இருந்து மோட்டார் சைக்கிளில்; தனது வீட்டிற்கு  செல்லும் போது பிஸ்ரல் குழுவினரால் இவர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளதாக ஏறாவூர் காவற்துறையினர் தெரிவித்துள்ளனர்