அமைச்சராக தகுதி அற்றவராம் பிள்ளையான்

karuna2[1] முதலமைச்சராக கடமையாற்றக் கூடிய தகுதிகள் பிள்ளையானிடம் காணப்படவில்லை என பாராளுமன்ற உறுப்பினர் விநாயகமூர்த்தி முரளீதரன் எனப்படும் கருணர் தெரிவித்துள்ளார். வால் ஸ்ரீட் சஞ்சிகைக்கு அளித்த விசேட செவ்வியின் போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளின் உறுப்பினர்கள் இன்னமும் தமது பயங்கரவாதப் பண்புகளை முழுமையாக கைவிடவில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். கிழக்கு மாகாண முதலமைச்சர் பதவியை வகிக்கும் அளவிற்கு பிள்ளையான் தகுதியானவரல்ல என கருணா தெரிவித்துள்ளார். இதேவேளை, கருணா நாட்டைவிட்டு தப்பிச் சென்ற இக்கட்டான சூழ்நிலையில் கட்சியை தாமே கட்டிக்காத்ததாக பிள்ளையான் தெரிவித்துள்ளார். கிழக்கு மாகாண அபிவிருத்திப் பணிகளை மேற்கொள்ள விடாது மத்திய அரசாங்கம் தமது கைகளுக்கு விலங்கிட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். வரி அறவீடு செய்யக் கூடிய வசதி இல்லை எனவும், ஆசிரியர்கள் தமிழ் காவல்; உத்தியோகத்தர்கள் நியமிக்கப்பட வேண்டும் எனவும் பிள்ளையான் தெரிவித்துள்ளார். தமிழீழ விடுதலைப் புலிகளுடனான யுத்தம் நிறைவடைந்ததன் பின்னர் ஆயுதங்களை களையப்படும் என அவர் உறுதியளித்துள்ளார். தேவையான அரசியல் அதிகாரங்கள் கிடைக்கப் பெற்றவுடன் ஆயுதங்கள் முற்றாகவே களையப்படும் என அவர் தெரிவித்துள்ளார்