குடும்பஸ்தர்கடத்தப்பட்டுள்ளார்

யாழ்ப்பாணம் அரசடி பிரதேசத்தை சேர்ந்த குடும்பஸ்தர் ஒருவர் கடத்தப்பட்டுள்ளதாக யாழ்ப்பாணம் மனித உரிமை ஆணைக்குழு பணிமனையில் நேற்று (19) முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. கடந்த ஜனவரி 31 திகதி திருகோணமலை தம்பலகாமத்தில் உள்ள தனது தயாரின் வீட்டுக்கு சென்ற நிலையில் அவரது கணவர் காவற்துறையினரால் கடத்திச் செல்லப்பட்டுள்ளதாக மனைவி மேற்கொண்டுள்ள முறைப்பாட்டில் தெரிவித்துள்ளார்.

34 வயதான புண்ணியமூர்த்தி நடேசலிங்கம் என்ற குடும்பஸ்தரே இவ்வாறு கடத்தப்பட்டுள்ளார். இரண்டு வாரங்களாக தனது கணவர் குறி;த்த எந்த தகவல்களும் இல்லை எனவும் அவரை கண்டறிய உதவுமாறும் நடேலிங்கத்தின் மனைவி மனித உரிமை ஆணைக்குவிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.