மருந்து பொருட்களுக்கான தட்டுப்பாடு

யுத்த நடவடிக்கைகளில் காயமடையும் படையினருக்கு தேவைப்படும் பல்வேறு மருந்து பொருட்களுக்கு தொடர்ந்தும் தட்டுப்பாடு நிலவி வருவதாக அகில இலங்கை மருத்துவர்கள் சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது
குறிப்பாக சத்திரசிகிச்சைகளின் போது பயன்படுத்தப்படும் மயக்க மருந்துகளுக்கு தொடர்ந்தும் தட்டுப்பாடு நிலவுவவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது இதனால் மயக்க மருந்து பயன் படுத்தாமலே சத்திர சிகிச்சை செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
இந்த மருந்து பொருட்களுக்கான தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக இரு வாரங்களுக்கு முன்பே சுகாதார அமைச்சிற்கு அறிவிக்கப்பட்டுள்ள போதிலும் எந்த விதமான நடவடிக்கையினையும் அமைச்சு மேற்கொள்ளவில்லை என அந்த அமைப்பு குற்றம்சுமத்தியுள்ளது