முஸ்லிம் மக்களை மீள் குடியமர்த்த

1990ம் ஆண்டு யாழ்ப்பாண மாவட்டத்திலிருந்து இடம்பெயர்ந்த முஸ்லிம் மக்களை அந்தந்த பிரதேசங்களில் மீள் குடியமர்த்த அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
சமூக சேவைகள் அமைச்சர் டக்கர்ளஸ் தேவானந்தாவிடம் முஸ்லிம் குழுக்கள் விடுத்த வேண்டுகேளைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
குறித்த பிரதேசங்களில் வீடுகளை நிர்மானித்து கொடுப்பதாக அமைச்சர் உறுதிமொழியளித்துள்ளார்.
யாழ்ப்பாணத்திலிருந்து பலவந்தமாக வெளியயேற்றப்பட்ட முஸ்லிம் குடும்பங்கள் தம்மை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
இவ்வாறு இடம்பெயர்ந்த மக்கள் தற்போது புத்தளம் பிரதேசத்தில் இடைத்தங்கல் முகாம்களில் தங்கியிருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.
பாதிக்கப்பட்ட முஸ்லிம்களை மீளக்குடியமர்த்த தேவையான சகல நடவடிக்கைகளும் எடுக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

அவர்கள் செய்த துரோக வேலை காரணமாகத்தான் அவர்கள் பலவந்தமாக வெளியேற்றப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது