ஊழியர்களுக்குஇராணுவ பயிற்சி

சிறைச்சாலையில் சேவையாற்றும் புதிய ஊழியர்களுக்கு இராணுவ பயிற்சிகளை வழங்குவதற்கு சிறைச்சாலை திணைக்களம் நடவடிக்கை எடுத்து வருகின்றது.
கடந்த நாட்களில் சிறைச்சாலைகளில் இடம்பெற்ற சம்பவத்தை கவனத்தில் கொண்டே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக திணைக்களத்தின் ஆணையாளர் மேஜர் ஜெனரல் வஜிர விஜேகுணவர்த்தண தெரிவித்துள்ளார். நீதிமன்றங்களுக்கு கைதிகளை அழைத்துச் செல்லும் போது விஷேட பாதுகாப்புக்களை பொலிசாரிடம் இருந்தே தற்போது பெற்றுக் கொள்ள வேண்டியுள்ளதால் இதனை தவிர்க்கும் முகமாக ஊழியர்களுக்கு ராணுவ பயிற்சி வழங்கப்படவுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்