சுற்றிவளைப்புத் தேடுதல்களை

யாழ்ப்பாணம் வடமராட்சியின் கரவெட்டி பிரதேசத்தில் நூற்றுக்கணக்கான இராணுவத்தினர் நேற்று (11) அதிகாலை முதல் மாலை வரை கடுமையான சுற்றிவளைப்புத் தேடுதல்களை மேற்கொண்டதாக தெரிவிக்கப்படுகிறது.

ராஜகிராமம் பகுதியில் அண்மையில் கொல்லப்பட்ட சர்வதேச செஞ்சிலுவைச் சங்க உள்ளுர் பணியாளரின் சமய கிரியைகள் அவரது வீட்டில் நேற்று நடைபெற்றது. அங்கும் படையினர் துப்பாக்கிகளுடன் சென்று தமது தேடுதல்களை மேற்கொண்டுள்ளனர்.