யாழ்ப்பாணத்த்ல் பேரணி

nallur_kandaswamy_temple_3[1] மக்களை அரச கட்டுப்பாட்டு பகுதிக்கு வருவதற்கு அனுமதிக்குமாறு கோரி யாழ்ப்பாணத்தில் பேரணி இன்று இடம்பெற்றது. யாழ். மாவட்ட தேச மக்கள் எழுச்சிப்பேரவை ஏற்பாடு செய்திருந்த இந்தப்பேரணி இன்று காலை யாழ். செயலகத்தில் ஆரம்பமாகி யாழ். வைத்தியசாலை வீதி கோவில் வீதிகளூடாக சென்று

நல்லூர் ஆலய முன்றலில் முடிவடைந்தது.

யாழ். குடாவின் வலிகாமம், வடமராட்சி, தென்மராட்சி தீவகப்பகுதியிலிருந்து இலங்கை போக்குவரத்து பஸ்வண்டிகள், தனியார் பஸ் வண்டிகள், ஆட்டோக்கள் மூலம் பொதுமக்கள் வந்தனர்.

பேரணியில் வந்தோர் ஜனாதிபதிக்கான மகஜரை யாழ். அரசாங்க அதிபரிடம் கையளித்ததுடன் யூ.என்.எச்.சீ.ஆர் அலுவலகத்தில் ஐ.நா.வுக்கான மகஜரும் வழங்கப்பட்டது.

இப்பேரணியில் ஆயிரக்கணக்கான மக்கள் பங்குபற்றியதுடன் பேரணி நிறைவில் ஈழமக்கள் ஜனநாயக செயலாளரும் சமூக சேவைகள் மற்றும் சமூக நலத்துறை அமைச்சருமான கே.என்.டக்ளஸ் தேவானந்தாவின் நன்றி உரையுடன் முடிவுற்றது