அடைக்கலநாதன் உரை ஆற்றுகையில்…

அரசாங்கம் கூறுகின்றபடி படையினரின் பாதுகாப்புப் பிரதேசங்களுக்கு வருபவர்கள் படையினரால் வடிகட்டப்படுகின்றனர். அதன் போது அவர்கள் காணாமல் போகின்றனர். பலர் சித்திரவதைக்கும் சிறைவாசத்திற்கும் உட்பட்டுள்ளனர் என்று தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்செல்வம்அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.அவசரகாலச்சட்டம் மீதான விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில், மனித நேயம் என்பதற்கு அர்த்தமே இல்லை, குறுகிய நிலப் பரப்பிற்குள் மூன்றரை இலட்சம் மக்கள் இடம்பெயர்ந்து அகதிகளாக்கப்பட்ட இடத்தின் மீதே அதுவும் அவர்களின் தலையின் மீதே குண்டுகள் விழுகின்றன. காயங்கள், சிறு காயங்கள் அல்லது கைகள், கால்கள் துண்டாடப்பட வேண்டும். விறைப்பு ஊசி போடப்படாமல் கைகளும் கால்களும் வெட்டப்படுகின்றன. கொடுமையிலும் கொடுமை நடக்கிறது. காயமடைந்தவர்களுடன் வருபவர்கள் அகதி முகாமிற்கு கொண்டு செல்லப்படுகின்றனர்.என்று அவர் உரை ஆற்றும் போது மனவருத்தத்துடன் தெரிவீத்தார்.