சிறுசெய்திகள்

தமிழகத்தின் முன்னணி தொலைக்காட்சி நிறுவனமான சன் தொலைக்காட்சியின் மீள் ஒளிபரப்பு அலுவலகம் , நேற்றிரவு அடையாளம் தெரியாத நபரால் கையெறி குண்டு வீசி தாக்கப்பட்டுள்ளது.இதைப் பற்றி சன் தொலைக்காட்சியில் சிறிதாய் கூட செய்தி இல்லை.இலங்கையில் நடந்துள்ள இந்த தாக்குதலை அந்நாட்டு பத்திரிக்கைகள் வெளியிட்டுள்ளன.தாக்குதல் நடைபெற்றதை வவுனியா போலீசாரும் உறுதிப்படுத்தி உள்ளனர்.

அங்கு செத்துவிழும் மக்களைப் பற்றிய செய்தியைத்தான் சன் இருட்டிப்பு செய்கிறது என்றால் , இதையுமா??!!

அங்கு எல்லா தமிழ் மக்களும் செத்தொழிந்த பின் யாருக்காக தமிழ் ஒளிபரப்பு செய்வீர்கள் சன் நிறுவனமே…சிங்களர்களுக்கா?! இல்லை இல்லை நீங்கள் சிங்களர்களுக்காக தனி அலைவரிசை தொடங்கினாலும் தொடங்குவீர்கள்.

நன்றி ப்ரியன்

முல்லைத்தீவில் சிக்கியுள்ள மக்களை விடுவிக்கக் கோரி யாழ்ப்பாணத்தில் ஆர்ப்பாட்டம் - ஈபிடிபி ஏற்பாடு :

முல்லைத்தீவில் சிக்கியுள்ள மக்களை விடுதலைப்புலிகள் விடுவிக்க வேண்டும் என வலியுறுத்தி நேற்று யாழ்ப்பாணத்தில் ஆர்ப்பாட்ட பேரணி ஒன்று நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தை ஈழமக்கள் ஜனநாயக கட்சி ஏற்பாடு செய்திருந்தது

                                                                                                                                           

கம்ஹா மாவட்டத்தில் வத்துருகம பிரதேசத்தில் இயங்கிவந்த கள்ள நோட்டு அச்சிடும் நிலையம் ஒன்றை பொலிசார் முற்றுகை இட்டனர்.இந்நிலையத்தில் இருந்து 1000,500,100 பெறுமதியான் போலி நோட்டுக்களும் பொலிசாரால் கைப்பற்றப்பட்டன.