யாழ்ப்பாணத்தில் சுகந்திரதினம்

சுகந்திரதினம் என்பது சுகந்திரமாக கொண்டாடவேண்டியது அல்லவா!!

யாழ்ப்பாணத்தில் இப்படி…….jaffna3[1] ஒலி பெருக்கிகள் பொருத்தப்பட்டு ராணுவ வாகனங்கள் மூலம் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. வர்த்தக நிறுவனங்கள் அரச அரசசார்பற்ற நிறுவனங்கள் பொதுச் சந்தைகள் மற்றும் வாகனங்களில் தேசியக் கொடி பறக்கவிடப்பட வேண்டும் என படைத்தரப்பு உத்தரவு பிறப்பித்துள்ளது. இதனை மீறுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளதுடன் வர்த்தக நிறுவனங்கள் திறக்க விடப்பட மாட்டாது எனவும் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும் எனவும் அறிவிக்கப்பட்டதனை அடுத்து குடாநாடு எங்கும் ஜெக ஜோதியாக தேசியக் கொடி பறக்க விடப்பட்டுள்ளது. வர்த்தகர்கள் தேசியக் கொடியை இறக்குமதி செய்து விற்பனை செய்வதில் பெரும் ஆர்வம் காட்டி வருகின்றனர். அதிக விலையில் விமானம் மூலம் இறக்குமதி செய்யப்படும் தேசியக் கொடிகள் குடாநாட்டின் பல பகுதிகளிலும் பறந்து கொண்டிருப்பதை காணக் கூடியதாக இருக்கின்றது.

இது சுகந்திரதினம் இல்லை சுணைகெட்ட தினம்