அரசாங்கம் நேற்று நிராகரித்துள்ளது

பேச்சுவார்த்தை மூலம் இலங்கையின் பிரச்சினைக்கு தீர்வுகாணும் நோக்கில் மத்தியஸ்தம் வகிக்க கிழக்கு திமோர் ஜனாதிபதி ராமோஸ் நோர்டா விடுத்த வேண்டுகோளை இலங்கை அரசாங்கம் நேற்று  நிராகரித்துள்ளது.
விடுதலைப்புலிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தாமல் இலங்கையில் சமாதானம் ஏற்படாது என திமோர் ஜனாதிபதி தெரிவித்திருந்தார். கிழக்கு திமோர் ஜனாதிபதி நோர்டா பிரிவினைவாத போராட்டத்தை மேற்கொண்டு ஜனாதிபதியானவர் எனவும் அவரது மத்தியஸ்தம் தமக்கு தேவையில்லை என அரசாங்கத்தின் உயர்மட்டத்தரப்பு நேற்று தெரிவித்துள்ளது.
இந்தோனேசியாவுக்கு சொந்தமாக இருந்து கிழக்கு திமோர் சில காலங்களுக்கு முன்னர், தனியாக பிரிந்து சென்றது. இந்த நிலையில் கிழக்கு திமோர் ஜனாதிபதி இலங்கையின் உள்நாட்டு பிரச்சினையில் தலையீடுகளை மேற்கொள்ள முயற்சித்ததன் மூலம், கிழக்கு திமோருக்கும் விடுதலைப்புலிகளுக்கும் இடையிலான தொடர்புகள் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக அரச தரப்பு குறிப்பிட்டுள்ளது.