தாக்குதல்

karumpuli[1] 

அரச படையினர் மீது கரும்புலிகள் தாக்குதல்  வன்னியில் கேப்பாபுலவு என்ற இடத்தில் அரச ராணுவத்தினரின் முகாம்கள் மீது வெடி மருந்து நிரப்பிய வாகனங்களுடன் இரண்டு கரும்புலிகள் சென்று மோதி தாக்குதல் நடத்தியுள்ளனர். இதுகுறித்து புலிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, முல்லைத்தீவு மாவட்டம் புதுக்குடியிருப்புக்கும் முள்ளிவளைக்கும் இடையில் உள்ள கேப்பாவுலவு என்ற இடத்தில் முன்னேறி நிலைகொண்டிருந்த சிங்கள ராணுவத்தினரின் முகாம்கள் மீது வெடி மருந்து நிரப்பட்ட வாகனம் மூலம் இரண்டு கரும்புலிகள் தாக்குதல் நடத்தியுள்ளனர். இந்த தாக்குதலில் போது லேப், கேணல் குயில்வண்ணன் என்று அழைக்கப்படும் சிவலிங்கம் சிவராஜா, மேஜர் பலிவேந்தன் என்று அழைக்கப்படும் வவுனியா, நெடுங்கேணியைச் சேர்ந்த தியாகராஜா தமிழ்ச்செல்வன் ஆகிய இரு கம்புலிகள் பலியானதாக கூறப்பட்டுள்ளது