விபத்தில் சிறுமிபலியாகியுள்ளார்

காரைநகரில் இன்று காலை இடம்பெற்ற வீதி விபத்தில் சிறுமி ஒருவர் பலியாகியுள்ளார். காரைநகர் பீச் றோட்டில் இன்று காலை 7.45 மணியளவில் இடம்பெற்ற இச்சம்பவத்தில் சேவையில் ஈடுபட்டிருந்த இ.போ.சபைக்குச் சொந்தமான பஸ்வண்டி மோட்டார் சைக்கிளுடன் மோதியபோதே இவ்வனர்த்தம் ஏற்பட்டுள்ளது. 82-0474 எனும் இலக்கமுடைய மேற்படி பஸ்வண்டி மோதியதில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த சிவனேசன் மற்றும் அவரது 8 வயதான சிவநேசன் லக்ஷ்மி ஆகியோர் மோதுண்டுள்ளனர்.

இதில் லக்ஷ்மி அதே இடத்தில் உயிரிழந்துள்ளார். பாடசாலைக்கு தனது தந்தையுடன் சென்று கொண்டிருந்த சிறுமியான லக்ஷ்மி கொல்லப்பட்டதில் அப்பகுதியே சோகமயமாக காட்சியளிப்பதாக பிரதேச வாசிகள் தெரிவித்துள்ளனர்.  விசாரணைகளை மேற்கொண்டுள்ள ஊர்காவற்றுறை பொலிஸார் பஸ் சாரதியை கைது செய்து தடுப்புக் காவலில் வைத்துள்ளனர்