கொழும்பில் விடுதலைபுலிகள் விமானத்தாக்குதல்

[plane3.jpg]Air-strike[1]

[plane5.jpg][plane6.jpg]5 படையினர் கொல்லப்பட்டு உள்ளனர்

கொழும்பில் இன்று இரவு வான் பாதுகாப்புப் பொறிமுறை இயக்கப்பட்டு மின்சாரம் நிறுத்தப்பட்டதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
பாதுகாப்புக்கு அச்சம் ஏற்படும் வகையில் வெளியான தகவலை அடுத்து கொழும்பு பெரும்பாகத்தில் மின்சாரம் நிறுத்தப்பட்டதுடன் வான் பாதுகாப்பு பொறிமுறையும் செயற்பட்டதனை அடுத்து பதட்டம் நிலவியதாக தெரிவிக்கப்பட்டிருடுகிறது.
கொழும்பு மற்றும் கொழும்பின் புறநகர்ப் பகுதிகளில் அனைத்து இடங்களிலும் வானை நோக்கி கடுமையான வான் தாக்குதல்களை படையினர் ஆகாயத்தை நோக்கி மேற்கொள்வதாக தெரிவிக்கப்படுகிறது.இதனைல் கொழும்பில் பாரிய பதட்டம் ஏற்பட்டுள்ளது.
இன்று இரவு வன்னியில் இருந்து புத்தளம் கற்பிட்டி பக்கமாக கொழும்பு நோக்கி வந்ததாக சந்தேகிக்கப்படும் தமிழீழ விடுதலைப் புலிகளின் இரண்டு வானூர்திகள் இன்று வெள்ளிக்கிழமை இரவு 9:30 மணியளவில் இத்தாக்குதலை நடத்தியுள்ளது.
2 தாக்குதல் விமானங்கள் கொழும்பின் மத்தியில் அதி உயர் பாதுகாப்பு வலையப் பகுதியில் 2 குண்டுகளை வீசிச் சென்றதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இவற்றில் ஒன்று உள்நாட்டு இறைவரித் திணைக்கள அலுவலகத்திற்கு அண்மித்தும் மற்றையது பிறிதொரு பகுதியிலும் வீழ்ந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
பிந்திக் கிடைத்த தகவல்களின்படி ஆனைமடுவப் பகுதியில் 3 குண்டுகளும், வத்தளை அல்லது விமான நிலையப் பகுதியில் ஒரு குண்டும் வீழ்ந்ததாக தெரிவிக்கப்படுகின்ற போதும் இதனை உறுதிப்படுத்த முடியவில்லை.
எனினும் கொழும்பு உள்நாட்டு இறைவரித் திணைக்களத்திற்கு அண்மையில் வீழ்ந்த குண்டினால் 42 பேர் காயம் அடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
காயமடைந்தவர்கள் அனைவரும் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் எத்தனைபேர் பொதுமக்கள் என்பது குறித்த தகவல்கள் இதுவரையில் வெளியாகவில்லை.
காயமடைந்தவர்கள் பொதுமக்கள் என அரச தரப்பு செய்திகள் தெரிவித்த போதிலும் தாக்குதல் நடந்த நேரத்தில் இறைவரித்திணைக்களகத்தில் அந்தளவு பொதுமக்கள் இருந்திருக்கமாட்டார்கள் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
கொழும்பில் தாக்குதல் நடத்தப்பட்ட உள்நாட்டு இறைவரித் திணைக்கள கட்டடம் சேதத்திற்கு உள்ளாகி உள்ளதுடன் இந்தப் பகுதியிலேயே வான்படையின் தலமையகம், லேக்கவுஸ் பழ்pரசகைல் காரியாலையம், ஐநாவின் பிரதி செயலாளர் நாயகம் கோம்ஸ் தங்கியுள்ள ஹில்ட்டன் 5 நட்சத்திர விடுதி உள்ளிட்ட பிரபல விடுதிகள், பளைய நாடாளுமன்றம் முதலான முக்கிய கட்டடங்கள் அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை புதக்குடியிருப்பு மற்றும் அதனை அண்மித்த பகுதிகளில் கடுமையான சத்தங்கள் கேட்பதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த அதிர்வுகள் தென்மராட்சியை அண்மித்தும் யாழ் கரையோரப் பகுதிகளை அண்மித்தும் கேட்பதாக கூறப்படுகிறது