மாணவர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்

யாழ்ப்பாணம் வலிகாமம் கிழக்கு ஆவரங்கால் பிரதேசத்தில் படையினர் மேற்கொண்ட சுற்றிவளைப்பு தேடுதலில் 16 வயதான பாடசாலை மாணவர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். இந்த மாணவரின் வீட்டில் குளுகோஸ் உள்ளிட்ட மருந்துப் பொருட்கள் இருந்ததாக படையினர் தெரிவித்துள்ளனர்.

கடந்த புதன் கிழமை இடம்பெற்ற இந்த சம்பவத்தை அடுத்து, மாணவரின் தாயார் மண் எண்ணெயை ஊற்றி தற்கொலை செய்து கொள்ள முயற்சித்துள்ளார். சுற்றிவளைப்பு தேடுதலின் போது மாணவரின் தந்தை தலைமறைவாகி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கைதுசெய்யப்பட்ட மாணவரின் தாயார் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் திவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

வெளியில் இருந்து கிடைக்கப் பெற்ற தகவல் ஒன்றை அடுத்தே படையினர் இந்த திடீர் சுற்றிவளைப்பு தேடுதலை மேற்கொண்டதாக கூறப்படுகிறது.

அண்மையில் ஆவரங்கால் பகுதியில் இரண்டு இளைஞர்கள் படையினரால் சுட்டுக்கொல்லப்பட்ட நிலையில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பிரதேசவாசிகள் தெரிவித்துள்ளனர்.