தெல்லிப்பழை பாதுகாப்பு

தெல்லிப்பழை பாதுகாப்பு வலய முன் னரங்குகளை பின்னகர்த்தும் நடவ டிக்கை களை உடன் மேற்கொள்ளமுடியாத காரணத்தால், மாற்று ஏற்பாடுகள் செய்வது என முடிவு செய்யப்பட்டுள்ளது.
அதியுயர் பாதுகாப்பு வலய மீள்குடிய மர்வு தொடர்பாக ஆராய்ந்துவரும் உயர் மட்டக் குழுவின் கூட்டம் நேற்றுமுன்தினம் பலாலியில்  நடைபெற்றது.
இந்தக் கூட்டத்தில் தெல்லிப்பழை யூனியன் கல்லூரி அதிபர் எஸ். புண்ணிய சீலன், மகாஜனக் கல்லூரி அதிபர் திருமதி சிவமலர் ஆனந்தசயனன், தெல்லிப்பழை வைத்தியசாலை அதிகாரி திருமதி சிவ சோதி சிவராணி, யாழ். சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆ.கேதீஸ்வரன், யாழ். போதனா வைத்தியசாலை புற்றுநோய் சிகிச்சை நிபு ணர் எஸ். ஜெயக்குமார் ஆகியோர் கலந்து கொண்டனர். யாழ்.மேல்நீதிமன்ற நீதிபதி இ.த.விக்ன ராஜா தலைமையில் இடம்பெற்ற கூட்டத் தில், தெல்லிப்பழை முன்னரங்க நிலைகளை பின்நகர்த்தி பாடசாலைகளையும் தெல்லிப்பழை வைத்தியசாலையும் இயங்குவது தொடர்பாக விரிவாக ஆராயப் பட்டது.
தெல்லிப்பழை முன்னரங்க நிலையை உடனடியாகப் பின்நகர்த்த முடியாத நிலை  ணப்படுவதாகப் படைத்தரப்பில்  தெரிவிக்கப்பட்டது.
அதனைத்தொடர்ந்து கீழ்வரும் புதிய நடைமுறைகளைச் செயற்படுத்துவது என்று முடிவு செய்யப்பட்டுள்ளது.
அதன் பிரகாரம்
* தெல்லிப்பழை வைத்தியசாலையை அதற்குரிய இடத்திலேயே இயக்குவதற்கு முன்னோடியாக வைத்தியர்கள் தமக்குரிய விடுதிகளில் தங்குவதற்கு அனுமதிக்கப்படுவர்.
* வைத்தியசாலையில் உள்ள " கதிர்வீச்சு ("எக்ஸ்றே") இயந்திரத்தையும் இயக்குவதற்கு ஏற்பாடு செய்யப்படும்.
* தெல்லிப்பழை மகாஜனா, யூனியன் கல்லூரி மாணவர்கள் பஸ்களில் நேரடியாக சோதனை நிலையம் வரை செல்வதற்கு அனுமதிக்கப்படுவர்.
சோதனை நிலையத்தில் இருந்து அரை கிலோ மீற்றர் தூரத்துக்கு அப்பால் இருந்து மாணவர்கள் நடந்து செல்லும் நடைமுறை நீக்கப்படும்.
* தெல்லிப்பழை மகாஜனக் கல்லூரி யில் இரவு காவலாளி ஒருவர் தங்க அனுமதிக்கப்படுவார்.
* தெல்லிப்பழை சோதனை நிலையத் தில் இருந்து ஆஸ்பத்திரி வரை செல்லும் வீதியின் புனரமைப்பு வேலை உடனடியாக