ஷமில் ஜயநெத்தி, காவற்துறையினரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

நீதிமன்ற உத்தரவொன்றுக்கு அமைய கொம்பனித் தெரு காவற்துறை நிலையத்திற்கு சென்ற புதிய இடதுசாரி முன்னணியின் அமைப்புச் செயலாளர் ஷமில் ஜயநெத்தி, காவற்துறையினரால் கைதுசெய்யப்பட்டுள்ளார். சன்டே லீடர் பத்திரிகையின் ஆசிரியர் லசந்த விக்ரமதுங்கவின் படுகொலைக்கு எதிராக லேக் ஹவுஸ் சுற்று வட்ட பகுதியில் நடைபெற்ற ஊடக அமைப்புகளின் ஆர்ப்பாட்டத்தின் போது, காவற்துறையினரின் கடமைகளுக்கு இடையூறு ஏற்படு;த்தினார் என்ற குற்றச்சாட்டின் பேரில் காவற்துறையினர் அவரை கைதுசெய்துள்ளனர். இது தொடர்பாக ஷமில் ஜயநெத்திக்கு எதிராக கொம்பனித் தெரு காவற்துறையினர் கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்திருந்தனர். இந்த வழக்கு இன்று (02) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது, ஜயநெத்தி காவற்துறையினருக்கு வாக்குமூலம் அளிக்காத நிலையில், அவரிடம் வாக்குமூலம் பெற்று கொள்ளுமாறு காவற்துறையினருக்கு நீதவான் உத்தரவிட்டிருந்தார். நீதிமன்றத்தில் வளாகத்தில் வாக்குமூலம் பெற்றுக்கொள்ளுமாறு ஜயநெத்தி கூறிய போதிலும் அதற்கு சந்தர்ப்பம் இல்லை என தெரிவித்த காவற்துறையினர் அவரை காவற்துறை நிலையத்திற்கு வருமாறு அழைத்து தற்போது கைதுசெய்துள்ளனர்