நடந்து முடிந்த மாகாண சபைத் தேர்தலில்

நடந்து முடிந்த மாகாண சபைத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு மத்திய மாகாணதில் வெற்றி பெற்றுள்ளது.

மத்திய மாகாணத்தின் தேர்தல் முடிவுகளின்படி ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு 6 லட்சத்து 50 ஆயிரத்து 203 வாக்குகளை பெற்று 36 ஆசனங்களை கைப்பற்றியுள்ளது. ஐக்கிய தேசிய கட்சி 4 லட்சத்து 22 ஆயிரத்து 125 வாக்குகளை பெற்று 22 ஆசனங்களையும் வெற்றி பெற்றுள்ளது

ஜே.வீ.பீ 15 ஆயிரத்து 416 வாக்குகளை பெற்றது எனினும் ஆசனங்கள் எதனையும் கைப்பற்றவில்லை. இதனடிப்படையில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு மீண்டும் மத்திய மாகாண சபையின் ஆட்சியை  பெற்றுள்ளது