குடும்பம் காணாமல் போன சம்பவத்தை

மன்னார் உப்புகுளம் அம்மன் கோயிலுக்கு அருகில் வசித்து வந்த தமிழ் வர்த்தகரான 37 வயதான ராசையா கோபால், அவரது மனைவி மற்றும் மூன்று மாத குழந்தை ஆகியோர் கடந்த 5 ஆம் திகதி முதல் காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த குடும்பம் காணாமல் போன சம்பவத்தை தொடர்ந்து பிரதேசத்தில் பதற்றம் நிலவுகிறது. குறித்த வர்த்தகரின் வீட்டை அயலவர்கள் சென்று பார்த்த போது வீட்டின் அனைத்து கதவுகளும் திறக்கப்பட்டிருந்தாகவும் வர்த்தகரின் குடும்பம் கடத்தப்பட்டிருக்கலாம் எனவும் பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.

எனினும் இன்று வரை இந்த காணாமல் போன சம்பவம் குறித்து மன்னார் காவற்துறையில் முறைப்பாடுகள் எதுவும் பதியப்படவில்லை. காணாமல் போன வர்த்தகர் கோபால் மர ஆலை ஒன்றை நடத்துவதுடன் பிரதேசத்தில் சுமை ஊர்தி போக்குவரத்து சேவையையும் நடத்தி வந்துள்ளார்