தற்கொலை குண்டுத்தாக்குதல்

 முல்லைத்தீவு சுதந்திரபுரம் பகுதியிலிருந்து இன்று முற்பகல் இராணுவக்கட்டுப்பாட்டுப் பகுதிக்கு சென்ற பொதுமக்களைச் சோதனையிட முயன்றபோது  தற்கொலை குண்டுத்தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது .
இந்த தாக்குதலில் 28 பேர் வரை  கொல்லப்பட்டு 20க்கும் மேற்பட்டோர்  காயம் அடைந்ததாகவும் இதில் கொல்லப்பட்டவர்களில் 20 பேர் படைத்தரப்பினர் எனவும் தெரிய வருகின்றது.
இராணுவ பெண் சிப்பாய்  ஒருவர் பெண் ஒருவரை  சோதனையிட முற்பட்டபோதே இந்த  சம்பவம் இடம்பெற்றுள்ளது