ஈழத்தமிழர்களைக்காப்பாற்றுங்கள்

ஈழத்தமிழர்களைக்காப்பாற்றுங்கள் என்று முழக்கமிட்டபடியே செல்போன் டவரில் இருந்து குதித்துதற்கொலை செய்துகொள்ள முயன்ற விடுதலைச் சிறுத்தைகள் கட்சித்தொண்டர்கைஉடைந்தநிலையில்மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.கடலூர் மாவட்டம் ஆலப்பாக்கம் கிராமத்தின் விடுதலைச்சிறுத்தைகள் கட்சிமுகாம் செயலாளராக இருப்பவர் தீனதயாளன்.   21 வயதான தீனதயாளன், இன்றுகாலை 7 மணியளவில்  ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாக முழக்கமிட்டபடியேஆலப்பாக்கத்தில்  உள்ள ரிலையன்ஸ்நிறுவனத்தின் செல்போன் டவர் மீதுஏறியிருக்கிறார்.  

சுமார்  100 மீட்டர் உயரம்
கொண்ட அந்த டவரின் பெரும்பகுதியை கடந்த நிலையில் ஊரில் உள்ள பொதுமக்கள்
ஓடி வந்து அவரின் தற்கொலை முயற்சியை கைவிடும்படி கோரிக்கை வைத்துள்ளனர்.
தீனதயாளனின் நண்பர்களும் அவரை கீழே இறங்கி வரும்படி கூறியிருக்கிறார்கள்.
சிலர் அவரைக் காப்பாற்ற அந்த டவரின் மீது ஏறியிருக்கிறார்கள்.
அதைப் பார்த்த தீனதயாளன், ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாகவும்,
புலிகளுக்கு ஆதரவாகவும் குரல் எழுப்பியபடியே கீழே குதித்து தற்கொலைக்கு
முயற்சித்திருக்கிறார்.  இதில் தீனதயாளனின் வலது கை உடைந்துவிட்டதாக
அவரின் நண்பர்கள் தெரிவிக்கின்றனர்.

பலத்த காயமடைந்த தீனதயாளன் மேல் சிகிச்சைக்காக சென்னை கொண்டு செல்லப்பட்டுள்ளார் \\மின்னல்