ஏ9 பாதையை எதிர்வரும் மார்ச் மாதமளவில்

மீட்கப்பட்ட ஏ9 பாதையை எதிர்வரும் மார்ச் மாதமளவில் மக்கள் போக்குவரத்துக்காகத் திறந்து வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக நெடுஞ்சாலைகள் மற்றும் வீதி அபிவிருத்தி அமைச்சர் டி.பி.ஏக்கநாயக்க தெரிவித்துள்ளார்.

இராணுவத்தினரின் பொறியியலாளர்கள் பாதையைத் தற்போது புனரமைத்து வருவதாகவும் திருத்தப் பணிகள் நிறைவடைந்ததும் மக்கள் பாவனைக்காக பாதை உடனடியாகத் திறந்து வைக்கப்படுமெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையின் பிரதான பாதையான ஏ-9 யாழ்ப்பாணம் தொடக்கம் கண்டி வரை புனரமைக்கப்பட்டு வருவதாகவும் அமைச்சர் ஏக்கநாயக்க மேலும் தெரிவித்துள்ளார்.