நேற்றைய படையினரின் தாக்குதலில் 22 பொதுமக்கள் பலி

வன்னி பகுதிகளில் நேற்றும் பரவலாக செல் வீச்சுக்கள் காரணமாக படுகொலையான 22 சடலங்கள் வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளன என கிளிநொச்சி மாவட்ட பிராந்திய சுகாதாரத்துறை பணிப்பாளர் வைத்திய கலாநிதி சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார்.

சுதந்திரபுரம் வைத்தியசாலைக்கு 12 சடலங்களும் உடையார்கட்டு வைத்தியசாலைக்கு 10 சடலங்களும் கொண்டு வரப்பட்டுள்ளன. பலியான பலரின் உடல்கள் அந்தந்த இடங்களிலேயே புதைக்கப்படுவதாகவும் பரவலாக செல் வீச்சு தாக்குதல்கள் மேற்கொள்ளப்படுவதனால் மக்கள் தொடர்ந்து இடம்பெயர்ந்து ஓடிக்கொண்டிருப்பதாகவும் அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

யுத்தம் காரணமாக பெரும் எண்ணிக்கையிலான சிவிலியன்கள் பாதிக்கப்பட்ட நாடாக இலங்கை திகழ்கிறதென பெல்ஜியத்தை மையமாகக் கொண்டு இயங்கும் க்றைசிஸ் வொட்ச் அமைப்பு தனது மாதாந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிராக அரச படையினர் வெற்றிகளை குவித்த போதிலும், பெரும் எண்ணிக்கையிலான சிவலியன்கள் இந்த மோதல்களில் உயிரிழப்பதாக அந்த அமைப்பு குறிப்பிட்டுள்ளது