தர்சிகாவின் காதல்(உண்மைக்கதை)

தர்சிகா 17 வயதை உடைய பெண் பார்பவர்களை கவரும் கண்களையும்.நீண்டகூந்தலையும் வெள்ளை நிறத்தையும் கொண்டவள்.பயந்த சுபாவமும் கொண்டவள்.இவளது குடும்பம் நடுத்தர வசதியை கொண்டது.தந்தையார் கடை ஒன்றில் வேலை செய்பவர்.தாயார் வீட்டில் இருப்பவர்.இவளுக்கு 1 அண்ணனும் 1தம்பியும் 3தங்கையும் இவ்வாறு ஒரு பெரிய குடும்பம்.தர்சிகாவின் அண்ணன் குமார் யாழ் இந்துக்கல்லுரியில் கல்விகற்கிறான்.அவனுடன் கூடப்படிப்பவன் தான் நீதன்.நீதன் எப்போதும் பணக்கார வீட்டுப்பிள்ளை போல் உடை நடை பாவனை உள்ளவன்.நீதன் தர்சிகாவில் அண்ணன் குமார் உடன்படிப்பவன் ஆகையால் குமார் வீட்டிற்கு வருவது வழக்கம்.

இவ்வாறு குமார் வீட்டிற்கு முதல் தடவை வரும் போது தர்சிகாவை காண்கிறான்.தர்சிகாவும் அவனை பார்க்கும் போது அவனும் பார்கிறான். முதல் காதல் என்றால் உடன் பத்திக்கும் அல்லவா இதனால் காதல் தர்சிகாவில் துளிர் விட ஆரம்பித்தது.ஆனால் நீதன் அவள் மேல் காதல் கொள்ளவில்லை ஆனல் காமம் கொண்டான். குமார் இல்லாத நேரத்தில் குமார் வீட்டிற்குச் செல்வதுவும்.அவளுடன் பேசுவதும் ஆக தொடர்ந்து வந்தான்.குமார்க்கு இந்த விடயம் தெரியவந்தது.அவனும் நீதன் நல்லவன் என்று நினைத்து அவன் பணக்கரன் என்பதாலும் இந்தவிடயத்தை அப்படியே விட்டு விட்டான்.நீதன் அவளுடன் நெருங்கி பழக முயற்சி செய்கிறான்.ஆனால் அவள் பயந்த சுபாவம் உடையவள் என்பதால் அவள் அதற்கு மறுப்பு தெரிவிக்கிறாள்.ஆனலும் நீதன் விடவில்லை முத்தங்களை மட்டும் பறிமாறினான்.அதன் பின்தான் இந்த சம்பவம் நடந்தது………….நீதன் வெளிநாடு செல்வதற்காய் கொழும்பு வந்து விட்டான்.பின்பும் அவளுடன் தொலைபேசி மூலம் பொழுது போக்காக கதைத்துவந்தான்.ஆனால் அவளோ அவனே தன் கணவன் என்று நினைத்து வாழ்ந்தாள்.அவன் கிடைக்க வேண்டும் என்று பெருமாள் கோவிலில் விரதம்.வெள்ளிக்கிழமை விரதம் என்று அவள் வாழ்ந்தாள்.அவ்வாறு இருக்கையில் அவன் வெளிநாடு வந்து சேர்ந்தான். பின்பும் ஓர் இரு தடவை அவளுடன் பேசினான் பின்பு பேசவில்லை.நீதன் தன்னை கல்யாணம் செய்வான் என்று அவள் எதிர்பார்த கதை பொய்யானது.நீதன் தனது உண்மை கதலியான நீஷா வுடன் தனது காதலை தொடர்ந்தான்.ஆனால் தர்சிகவே நீதன் தன்னை மறக்கவில்லை என்ற நினைப்பில் வாழ்கிறாள்………………………………………….

தர்சிகாவின் வாழ்க்கை????????????????????