இணுவிலில் கைக்குண்டு வீச்சு

kumburuppiddi%20550[1]

யாழ்ப்பாணம் வலிகாமம் பிரதேச இணுவில் பகுதியில் அமைந்துள்ள இலங்கை இராணுவத்தினரின் காவலரண் மீது சைக்கிளில் வந்த இனந்தெரியாத இரண்டு நபர்கள் கைக்குண்டுத் தாக்குதலை நடத்தியுள்ளனர்.
இத்தாக்குதல் சம்பவம் நேற்று வெள்ளிக்கிழமை இரவு 7.10 மணியளவில் இணுவில் துரை வீதியில் இடம்பெற்றுள்ளது.
இதன்போது காவலரணில் இருந்த இராணுவத்தினர் காயமடைந்ததாக அங்கிருந்து கிடைத்த தகவல்கள் தெரிவித்துள்ளன