ஒட்டுக்குழுக்கள் மிரட்டல்

sri_lanka_civil_warsff[1] தமிழ்த் தேசிய கூட்டமைப்பினால் நாளை ஒழுங்கு செய்யப்பட்ட வடகிழக்கு தழுவிய ஹர்த்தால் போராட்டத்திற்கு எவரும் ஆதரவு வழக்கக்கூடாது என படைத்தரப்பும் அவ்வப்பகுதிகளில் இயங்கும் ஏனைய தமிழ் ஒட்டுக் குழுக்களும் மக்களுக்கு அழுத்தங்களைப் பிரயோகிப்பதாக அறியக்கூடியதாக உள்ளது..

ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியினர் புளோட் உறுப்பினர்கள் யாழ்ப்பாணத்தில் அரச திணைக்களங்கள் மற்றும் நிறுவனங்களுக்கு தொலைபேசியில் அறிவுறுத்தல்களை விடுத்துள்ளதாக யாழ் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மன்னாரில் மோட்டார் சைக்கிள் படையினர் கடைகளுக்கு சென்று அறிவித்தல் விடுத்தத்துடன் ஒட்டுக் குழுக்கள் துண்டுப் பிரசுரங்களையும் வெளியிட்டுள்ளதாக கூறப்படுகிறது. வவுனியாவிலும் ஹர்த்தாலுக்கு அனுசரணை வழங்கக் கூடாது என மறைமுகமான மிரட்டல்கள் விடுக்கப்பட்டுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

கிழக்கிலும் நாளை ஹர்த்தால் நடவடிக்கைகளில் எவரும் ஈடுபடக் கூடாது என பாதுகாப்புத் தரப்பினர் எச்சரிக்கை விடுத்துள்ளதாக அறியக்கூடியதாக உள்ளது.

யாழ் செய்தியாளர்.நிலவன்