கடக ராசிக்காரரது

கடக ராசிக்காரரது உள்ளங்கை மிகசிறியதாக இருக்கும். கை விரல்கள் நீண்டும், ஒல்லியாகவும், மென்மையாகவும் காணப்படும். இவர்களது முகம் வட்டவடிவமாக இருக்கும். தலையில் மச்சம் இருக்கும்கடக ராசிக்காரர்கள் துணி சம்பந்தமான தொழில் செய்தால் நல்ல லாபம் பெறலாம். இவர்கள் உத்தியோகம் மற்றும் தொழில் முன்னேற்றமடைந்த நபராக இருப்பார். இவர்கள் மானசீகமாக பணியாற்றுபவர். கலையார்வம் மிக்க பணிகளில் ஆர்வம் கொண்டவர். உணவு தயாரித்தல், வாசனைப் பொருட்கள் தயாரித்தல், கலைப் பொருட்கள், திரவம், புகைப்படம் ஆகியவற்றில் பணியாற்றினால் சிறப்பாக இருக்கும். இந்த பணிகளில் ஏதேனும் ஒன்றில் இருந்தால் அவர்களுக்கு பணம் கொட்டும். இவர்கள் எப்போதும் எதிர்காலத்தின் மீது கவலை கொள்பவராக இருப்பார். பெரிய பணிகளை எளிதாக செய்து முடிப்பர்இவர்கள் அதிகம் பயணிப்பவர்களாக இருப்பர். கணவராக இருந்தால் மனைவியிடமும், மனைவியாக இருந்தால் கணவரிடமும் குடும்ப பொருளாதாரத்தை ஒப்படைத்துவிடுவர். பயணத்தால் இவர்களுக்கு லாபம் அதிகரிக்கும். 14, 26, 30 வயதுகளில் இவர்கள் நல்ல யோகத்தை பெறும் வாய்ப்பு உண்டு. பணத்தை சேமிக்கும் எண்ணம் இருக்கும். பணத்தை சம்பாதிக்க பாடுபடுவர். பணத் தட்டுப்பாடு இருந்து வரும்கடக ராசிக்காரர்கள் நற்குணங்களை பெற்றிருப்பர். அமைதியானவராகவும், நல்ல ஆசானாகவும், ஒழுக்கமானவர், மனித நேயம் கொண்டவராக இருப்பார். தாயின் குணங்களாக வளர்ப்பு, விட்டுக்கொடுத்தல், தியாகம் ஆகிய குணங்கள் இவரிடம் இருக்கும். கருணை, உதவும் மனப்பான்மை கொண்டவர். எதையும் மறைக்காமல் உள்ளதை உள்ளபடி பேசுவார். வாழ்க்கை பற்றிய தனி சித்தாந்தத்தை வகுத்து அதன்படி வாழ்பவர். நவீன உலகத்திற்கு ஏற்ப தன்னைத் தானே மாற்றிக் கொள்வார். குழந்தைகளுக்கு இணையாக பழகும் ஆற்றல் பெற்றவர்கடக ராசிக்காரர்கள் நல்ல நிர்வாகியாக இருப்பர். நடனம், மருத்துவம், ஆசிரியர், கதையாசிரியர், விற்பனைதாரர், கணிதம், இயந்திரம் சரி செய்பவர், இயந்திரத்தை இயக்குபவர் உள்ளிட்ட பணிகளில் பெரிய புகழ் அடைவர். 21 ல் இருந்து 28 வயது வரை மிக உயர்ந்த பணிகளில் புகழை அடைவர். கலை மற்றும் கல்வியில் புகழ் அடையும் அதிர்ஷ்டம் உண்டுஇவர்களுக்கு காதல் எந்த வகையிலும் ஒத்துவராது. இவர்கள் உறவினர்கள், குழந்தைகள் மீதே அன்பு செலுத்தலாம். உணவையும், தாம்பத்யத்தையும் இவர்கள் சமமாக கருதுவர். கடக ராசிக்காரர்களை காதலிப்பவர்கள் சுய மரியாதையையும், யதார்த்தத்தையும் இழக்க நேரிடும். கடக ராசிக்காரர்கள் சில நேரங்களில் காதலில் விழ வாய்ப்புண்டு. அது தோல்வியிலும் முடியலாம். கடக ராசிக்காரர்கள் காதலிப்பதை தவிர்ப்பது நல்லது.

கடக ராசிக்கு ரிஷபம், மீனம், விருட்சிகம், கன்னி ராசிக்காரர்கள் மிகச் சிறந்த நண்பர்களாவர். இவர்கள் கடக ராசிக்காரர்களுடன் பழகுவது நல்லதல்ல. இது தவிர சிம்மம், தனுசு, கும்ப ராசிக்காரர்களும் நண்பர்களாக இருப்பர். இவர்களை உதாசீனப்படுத்த வாய்ப்புண்டு. ரிஷபம், கன்னி மற்றும் மகர ராசிக்காரர்களுடனான நட்பு லாபத்தைத் தரும். மேஷம், துலாம், மகரம் ராகசிக்காரர்களுடன் நட்பு வைத்துக் கொள்ளும் முன் சிந்தித்து செயல்படுவது நல்லது. 20, 32, 40 வயதுகளில் மிகச் சிறந்த நண்பர்களையும், எதிரிகளையும் சந்திப்பர்.

கடக ராசிக்காரர்கள் விசித்திரமான ரசனை கொண்டவர்களாக இருப்பர். மற்றவர்களுக்கு உதவுவது, தர்மம் அளிப்பது, சமுதாய சேவைகளில் பங்கேற்பது, எந்த பணியிலும் ஆர்வம் காட்டுவது இவர்களது குணம். எதிலும் தனது தனித்திறமையை வெளிப்படுத்துவர். குதிரை ஏற்றம், சினிமா, நாடகம் பார்த்தல் இவற்றில் இவர்களுக்கு நாட்டம் இருக்கும் கடக ராசிக்காரர் தனது துணையை தனக்கு நிகராக பாவிப்பார். சுதந்திரத்தை அதிகம் விரும்புபவராக இருப்பார். மனைவியின் அதிகாரத்தையும், அவமரியாதையையும் சகித்துக் கொள்ள மாட்டார். சில சமயம் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பெரும் பிரச்சினையை எதிர்கொள்வர். தனது துணை மற்றவர்களுடன் பேசுவதையோ பழகுவதையோ விரும்பமாட்டார்கள்

கடக ராசிக்காரர்கள் தனது காரியம் முடிவதற்காக எதையும் செய்ய தயங்க மாட்டார்கள். நண்பர்கள், உறவினர்கள் என்று யாரையும் பார்க்கமாட்டார்கள். கற்பனை செய்து கூட பார்க்க இயலாத அளவிற்கு செயல்களை செய்வர். பலரையும் இவர்கள் விரோதிகளாக கருதுவர். கெட்டவர்களுக்கு கெட்டவர்களாக இருப்பர். இவர்களுக்கு சில தீய ஆசைகளும் இருக்கும். தீயவைகளில் இருந்து விடுபட திங்கட் கிழமைகளில் விரதம் இருத்தல், 11 வாரங்கள் திங்கட்கிழமைகளில் விரதம் இருத்தல், சிவனை வழிபடுதல் நல்லது. அரிசி, வெள்ளி, நெய், தயிர், பூ போன்ற வெள்ளை நிற பொருட்களை தானம் அளிக்கலாம். மற்றவர்களை ஏளனம் செய்ய வேண்டாம். ஆலோசனை கூற வேண்டாம்

மேஷ ராசிக்காரர்களுக்கு முத்து அதிர்ஷ்ட கல்லாகும். வெள்ளியில் முத்தை பதித்து திங்கட்கிழமை அன்று அணிந்து கொள்வது நலம்.

கடக ராசிக்காரர்கள் அடிக்கடி தனது எண்ணத்தை மாற்றிக் கொள்வார்கள். இவர்களது எண்ணம் நீரோட்டத்தைப் போன்றது. சந்திரன் இவர்களது கிரகமாகும். மற்றவர்களின் மனநிலைக்கு ஏற்ப செயல்படும் ஆற்றல் மிக்கவர்கள். சில சமயங்களில் கெட்ட சிந்தனைகள் கொண்டவர்கள். எனினும் பழகுவதுற்கு எளியவர். சுயநலத்துடன் நடந்து கொண்டாலும் மற்றவர்களின் துயரத்தில் பங்கேற்பர். கடக ராசிக்காரர்கள் மூர்கத்தனமாக இருக்க மாட்டார்கள். ஆனால் அவ்வாறு காட்டிக் கொள்வர். தனது உடமைகளை பிறர் பயன்படுத்த அனுமதிக்க மாட்டார்கள். விஞ்ஞானத்தில் இவர்களுக்கு தனி ஆர்வம் இருக்கும். இவர்கள் எளிதில் உணர்ச்சிவசப்படக் கூடியவர்களாகவும், அழுபவர்களாகவும் இருப்பர் கல்வியில் முதல் மாணவராக கடக ராசிக்காரர் இருப்பார். ஜாகப்படி எந்த இடத்திலும், எந்த நிறுவனத்திலும் கடக ராசிக்காரர்கள் முன்னணி வகிப்பர். இவர்களது கிரக நிலை அப்படி. மருத்துவம் பயிலும் ஆர்வம் இருக்கும். நடனம், நர்சிங், இயக்கம், சட்டம், பொறியியல், கணிதத் துறைகளில் சிறப்பாக விளங்க வாய்ப்புண்டு கடக ராசிக்காரர்களது ஆரோக்கியம் குறைந்தே இருக்கும். இவர்களுக்கு வயிறு, முதுகு, அடிப்பாதத்தில் பிரச்சினை ஏற்படும். இவர்களுக்கு அடிக்கடி உடல் நலக்குறைவு ஏற்படும். இவர்கள் எப்போதும் குழம்பிய நிலையில் இருப்பதால் மன அமைதி கிட்டாது. மன நிலையாலேயே பல சமயம் உடல் நிலை பாதிக்கப்படும். 42, 49 வயதுகளில் இவர்களுக்கு சிறுநீரகம் தொடர்பான வியாதிகள் ஏற்படும். ருசிக்கு உண்ணாமல், பசிக்கு உண்டால் நல்லது. இவர்கள் உப்பு பதார்த்தங்களை விரும்பி உண்ணுவர். இதனை குறைத்துக் கொள்ள வேண்டும். இரவில் உண்ணும் உணவில் மிகுந்த கவனம் கொள்ள வேண்டும். குறைவாக உண்ணுவது ஏற்றது. கடக ராசிக்கார பெண்கள் பிரசவ நேரங்களில் அதிக சிரமப்படுவர். எந்த துயரம் ஏற்படினும் அதனை இவர்கள் மனது எளிதாக ஏற்றுக் கொள்ளும்.கடக ராசிக்காரர்கள் தங்களது குடும்பத்தினர் மீது அதிக பாசமும், ஆதரவும் கொண்டவர்களாக இருப்பர். எப்போதும் குடும்பத்தினருடனேயே இருக்க விரும்புவர். தனிமையை கண்டு அஞ்சுவர். தனது குடும்பத்தினர் பற்றி எப்போதும் பேசிக் கொண்டும், சிந்தித்துக் கொண்டும் இருப்பர். கடக ராசிக்காரர்கள் தங்களது சுகத்தை மட்டுமே பார்ப்பர். குடும்பத்திற்காக தியாகம் செய்வர்.

இவர்களது ராசி சந்திரனின் பார்வையில் இருப்பதால் இவர்களுக்கு திங்கள் கிழமை உகந்ததாகும். புதன் கிழமையும், ஞாயிற்றுக் கிழமையும் உகந்ததாகும். வியாழக்கிழமை மட்டும் உகந்ததல்ல. மகர ராசிக்கு சந்திராஷ்டம தினங்களில் எந்த காரியத்தையும் துவக்க வேண்டாம்.

கடக ராசிக்கு 2 மற்றும் 7 ஆகியவை அதிர்ஷ்ட எண்ணாகும். இவர்களுக்கு 2ன் கூட்டு எண்களான 2, 11, 20, 29, 38, 47 மற்றும் 7ன் கூட்டு எண்களான 16, 25, 34, 43, 52, 61, 70 ஆகியவை அதிர்ஷ்டமாகும். இது தவிர 3, 6, 8, 9 ஆகியவை பரவாயில்லை. 4 அசுபம்