பொங்கல் பட வெளியீடு

பொங்கல் திருநாளையொட்டி நாளை படிக்காதவன், காதல்னா சும்மா இல்லை, நந்தலாலா ஆகிய படங்கள் ரிலீஸாகின்றன.
மாதவனின் குரு என் ஆளு, எஸ்.ஜே.சூர்யாவின் நியூட்டனின் 3ம் விதி, பசுபதி, அஜ்மல் நடித்த டி.என்.67-ஏ.எல்.4777 ஆகிய படங்கள் தியேட்டர் கிடைக்காமல் தள்ளிப் போய்விட்டன.
விஜய், நயனதாரா நடித்து, பிரபு தேவா இயக்கியுள்ள வில்லு நேற்றே ரிலீஸாகி விட்டது.
விஜயகாந்த் நடித்துள்ள எங்கள் ஆசான் படம் பொங்கலன்று வெளிவருவதாக இருந்தது. ஆனால், கோர்ட் தடை போட்டு விட்டதால் படம் ரிலீஸாகவில்லை.
நாளை தனுஷ், தமன்னாவின் படிக்காதவன், கமலினி- தேஜாஸ்ரீ- ரவிகிருஷ்ணாவின் காதல்னா சும்மா இல்லை, மிஷ்கின் நாயகனாக நடிக்க, ஸ்னிக்தா ஜோடி சேர்ந்துள்ள நந்தலாலா ஆகிய படங்கள் திரைக்கு வருகின்றன.
படிக்காதவன் ...
படிக்காத, வெட்டித்தனமாக சுற்றும் இளைஞனாக படிக்காதவனில் வருகிறார் தனுஷ். அவருக்கு ஜோடி போட்டுள்ளார் தமன்னா. இருவரும் இணைவது இதுவே முதல் முறை.
விவேக், அதுல் குல்கர்னி ஆகியோரும் படத்தில் உள்ளனர். நீண்ட இடைவெளிக்குப் பின்னர் நிரோஷாவும் படத்தில் நடித்துள்ளார்.
வெற்றிப் படங்களைக் கொடுத்துள்ள சுராஜ் இப்படத்தை இயக்கியிருக்கிறார். சன் பிக்சர்ஸ் படத்தை திரையிடுகிறது.
காதல்னா சும்மா இல்லை ..
ரவிகிருஷ்ணா மிக நீண்ட இடைவெளிக்குப் பின்னர் நடித்துள்ள படம். ராஜ் டிவி தயாரித்துள்ளது.
ரவிகிருஷ்ணாவுடன், சர்வானந்த் என்ற புதுமுகமும் நடித்துள்ளார். ரவிகிருஷ்ணாவுக்கு ஜோடி போட்டிருப்பவர் கமலினி முகர்ஜி.
இப்படத்தின் சிறப்பம்சம் வித்யாசாகர், மணி சர்மா, மூர்த்தி ஆகிய மூன்று இசையமைப்பாளர்கள் இசையமைத்திருப்பதுதான்.
தேஜாஸ்ரீ படத்தில் ஒரு பாட்டுக்கு ஆட்டம் போட்டுள்ளார்.
நந்தலாலா ..
இயக்குநர் மிஷ்கின் ஹீரோ வேடம் போட்டிருக்கும் படம்தான் நந்தலாலா. படம் வருவதற்கு முன்பே எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள படம்.
இளையராஜாவின் இசையில் பாடல்கள் சிறப்பாக வந்திருக்கின்றன. அஞ்சாதே படத்திற்குப் பின்னர் வெளி வரும் படம் என்பதால் மிஷ்கின் இப்படத்தை எதிர்பார்த்துள்ளார்.
பொங்கலை சந்தோமாக கொண்டாட திரைப்படங்களை கோலிவுட் ரிலீஸ் செய்துள்ள நிலையில், டிவிகளும் போட்டி போட்டுக் கொண்டு ஹிட் படங்களை நாளும், நாளை மறுநாளும் போடவுள்ளன.

நன்றி.கேசரி